எமது தொலைநோக்கு
"நியாயமான அரச சேவையை உருவாக்குதல்"

எமது பணிக்கடமை
"அரசாங்க கொள்கைகளுக்கிணங்க சேவைகளை வழங்குதல் வளங்களின் தொடர்பினைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடனான செயற்றிறன் மிக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயன்முறை மூலம் பிரதேச வாழ்மக்களின் வாழ்வினை மேலோங்கச் செய்தல்"

அறிமுகம்
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள குளிர்ச்சியான மலைகள் சூழ அமைந்துள்ளது பண்டாரவளை நகரம் இலங்கை மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மக்களினதும் மதிப்பைப் பெற்றுள்ளது. விவசாயத்தை மூலாதாரமாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது.

63652 எண்ணிக்கையிலான மக்கள் சனத்தொகையுடன் கூடிய 35 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதான பண்டாரவளை பிரதேசம் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் பிரதேசமாக விளங்குகிறது. அந்த வகையில் 74 சிங்களவர்களும் 20 தமிழர்களும் 5.6 முஸ்லிம்களும் 0.17 பர்கர் இனத்தவர்களும் 0.06 மலையாள இனத்தவர்களும் வாழ்கிறார்கள். நகர கிராமப்புரங்களில் வாழும் மக்கள் பெருமளவில் விவசாயத்தை மேற்கொள்வதோடு சுயதொழில் மற்றும் தொழிற்சாலைகள் அரச நிறுவனங்கள் தனியார் நிறவனங்கள் ஆகியவற்றில் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்கின்றனர்.


இப் பிரதேச மக்களின் தேவைகளை அரச கொள்கைகளுக்கேற்ப பூர்த்தி செய்யும் வகையில் பிரதேச செயலகம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. இத்தகைய பாரிய சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு போதிய இடவசதி இல்லாமை பெரும் குறையாக காணப்பட்டது. எனினும் அனைத்து வசதிகளுடனும் கூடிய பொதுமக்களின் தேவைகளை விறைவாகவும் தொடர்ச்சியாகவும் நிறைவேற்றுவதற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மானிப்பது இப் பிரதேச செயலகத்தின் செயலாளர் செல்வி.டீ.எம்.இந்திரா திசானாயக அர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக காணப்பட்டது. அதன் அடிப்படையில் பதுளை மாட்டச் செயலாளரின் பூரண ஒத்துழைப்போடு அரச முகாமைத்துவ அமைச்சின் சம்மதத்தோடும் நிதி உதவியோடும் புதிய கட்டிட நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

புதிய கட்டிட நிர்மானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை பல சிரமங்களுக்கு மத்தியில் மக்களுக்கு தொடர்ச்சியாக செம்மையான சேவைகளை வழங்கியதோடு 2007ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக செயற்திறனுக்கான பாராட்டுக்களையும் 2008ம் ஆண்டு தேசிய மடடத்தில் பாராட்டுக்களையும் 2009ம் 2010ம்  ஆண்டுகளில் அலுவலக முகாமைத்துவப் போட்டியில் பதுளை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் விசேட திறமைக்கான பாராட்டுதல்களையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. பல முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் இந்த இலக்கை அடையமுடிந்ததாயினும் பிரதேச செயலாளரின் வழிகாட்டலினூடாக அலுவலக உத்தியோகத்தர்களினதும் வெளிக்கள உத்தியோகத்தர்களினதும் கிராம அலுவலர்களினதும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும் ஒற்றுமை மனப்பாங்கு பெறும் பங்களித்துள்ளது.


இதுவரை சேவை செய்த வருமான நிர்வாகி மற்றும் பிரதேச செயலாளர்களின் பெயர் விபரங்கள்

01 திரு.திலக் ரணவிராஜா வருமான நிர்வாகி
02 திரு.பியல் அபேசிரி வருமான நிர்வாகி
03 திரு.டப்ளியு.பீ.பிரேமதாச வருமான நிர்வாகி
04 திரு.பீ.வெள்ளகெடிய வருமான நிர்வாகி /மற்றும் பிரதேச செயலாளர்
05 திரு.பீ.எச்.பீ. பிரேமசிரி பிரதேச செயலாளர்
06 திரு.எஸ்.பீ.எஸ்.சேனாதீர பிரதேச செயலாளர்
07 திரு.டப்ளியு.என்ஆர்.பீ.விஜயபால பிரதேச செயலாளர்
08 செல்வி.டீ.எம்.இந்திரா திசானாயக பிரதேச செயலாளர்
09 திருமதி.கே.எம்.எஸ்.டீ.ஜயசேகர
பிரதேச செயலாளர்
10 திரு ஈ.எம்.எஸ்.பீ.ஜயசுந்தர பிரதேச செயலாளர்
11 திரு.ஜி.ஜி.என்.குணரத்ன பிரதேச செயலாளர் 
12 திரு.ஐ.ஐி.ஐ,டி.ரத்நாயக்க பிரதேச செயலாளர் (தற்போதைய)

News & Events

16
ஜூன்2026
Ice Cream Dansala

Ice Cream Dansala

The second Ice Cream Dansala organized by...

15
ஜூன்2026
The second financial assistance under the President's Fund's

The second financial assistance under the President's Fund's

The second financial assistance under the President's...

குடியுரிமை சாசனம்

Scroll To Top